அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 2 தவணை மட்டுமே முதலமைச்சர் பதவி மலாக்கா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

2 தவணை மட்டுமே முதலமைச்சர் பதவி மலாக்கா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மலாக்கா மார்ச் 20-

மலாக்காவில் ஒருவர் இரு தவணைக்கு மட்டுமே முதலமைச்சர் பதவியில் இருப்பதை வரையறுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலாக்கா சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநில முதலமைச்சர் அட்லி ஷஹாரி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறந்த நிர்வாக நடைமுறை மற்றும் வெளிப்படையான போக்கை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னர்.

மக்கள் ஆதரவு வழங்கினால் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தில் மாற்றங்களையும் சீரமைப்பையும் அறிமுகப்படுத்த போவதாக கடந்த பொதுத் தேர்தலின்போது மலாக்கா நம்பிக்கை கூட்டணி வாக்குறுதி வழங்கியிருந்தது.

இந்த வாக்குறுதியை நிறைவு செய்யும் வகையில் மாநில அரசாங்கத்தின் இந்த தீர்மானம் அமைவதாக அட்லி ஷஹாரி தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன