அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்: மலேசியாவின் முகமட் ஹஷிக் மரணம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்: மலேசியாவின் முகமட் ஹஷிக் மரணம்

கோலாலம்பூர். மார்ச் 21-

நியூசிலாந்தில் துப்பாக்கிக்காரன் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் மலேசியரான முகமட் ஹஷிக் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் கிரிஸ்சர்ச் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிக்காரன் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் முகமட் ஹிஷிக் மரணமடைந்ததை பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ சமூக வலைத்தளங்களுக்கு அனுப்பிய செய்தியில் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

அந்த பயங்கரவாத தாக்குதலின் போது 17 வயதுடைய முகமட் ஹஷிக் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தாக்குதலில் காயமடைந்த கெடாவைச் சேர்ந்த 46வயதுடைய முகமட் தர்மிஷி சுஹைப்பின் புதல்வர் முகமட் ஹஷிக் ஆவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன