ஜோகூர்பாரு மார்ச் 21-

பாசீர்கூடாங் தஞ்சோங் லங்சாட் கடற்பகுதியில் இந்தியர்கள் ஈமச் சடங்கு செய்வதற்காக கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கிய 1.09 ஏக்கர் நிலத்தை நம்பிக்கை கூட்டணியின் மாநில அரசு ரத்து செய்தது குறித்து இந்தியர்கள் பெரும் ஏமாற்றமும்ய அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஆனால் கடந்த 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மாநில அரசாங்கத்தை நம்பிக்கை கூட்டணி கைப்பற்றியது இதனை தொடர்ந்து ஏற்கனவே தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஈம சடங்கிற்கான நில விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டது .

அந்த நிலத்தை  வழங்க முடியாது என மாநில ஆட்சி குழுக் கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பான கடிதம் ஈமச்சடங்கு குழுவிற்கான தலைவர் எம். பஞ்சாட்சரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது . இதனால் பஞ்சாட்சரமும் அவரது தலைமையிலான ஈமச்சடங்கு குழுவினரும் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

முன்னால் ஆட்சிக்குழு உறுப்பினர் வித்தியானந்தன் தீவிர முயற்சியினால் மாநில தேசிய முன்னணி அரசு பாசீர்கூடாங் தஞ்சோங் லங்சாட் கடற்பகுதியில் ஈமச் சடங்கு செய்வதற்காக நிலத்தை ஒதுக்கி இருந்தது.

இந்த இடத்தில் அடிப்படை குத்தகை பணிகளை மேற்கொள்வதற்காக கிட்டத்தட்ட 13 லட்சம் வெள்ளியும் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி அந்த ஈமச்சடங்கு பகுதிக்கான குத்தகை பணிகள் தொடங்கி இவ்வாண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி முடிந்திருக்க வேண்டும்.

இந்த ஈமச்சடங்கு இடத்தை நிர்மாணிப்பதற்காக பாசீர் கூடாங் நகராண்மைக் கழகம் ஒதுக்கீட்டை வழங்கி அதற்கான அனைத்து அடிப்படை வேலைகளும் செய்யப்பட்ட பின்னர் புதிய அரசாங்கம் இப்போது ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்துவிட்டதாக கூறுவது எந்த வகையில் நியாயம் என பஞ்சாட்சரம் வினவினார். தெரிவித்தார்.

இந்த ஈமச்சடங்கு இடத்திற்கான நிலத்தை கடுமையாக போராடி பெற்றோம். இப்போது அந்த இடமும் பறிபோய் விட்டது என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என அவர் சொன்னார்.