முகப்பு > அரசியல் > எம் ஏ.எஸ்ஸிற்கு டான்ஸ்ரீ டோனி தலைமையேற்க வேண்டும்! எம்பி ராயர் கோரிக்கை
அரசியல்முதன்மைச் செய்திகள்

எம் ஏ.எஸ்ஸிற்கு டான்ஸ்ரீ டோனி தலைமையேற்க வேண்டும்! எம்பி ராயர் கோரிக்கை

கோலாலம்பூர். மார்ச் 21-

பெரும் இழப்பு பிரச்சனையை எதிர்நோக்கி வரும் எம்.ஏ. எஸ் எனப்படும் மலேசிய விமான நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு அந்நிறுவனத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு ஏர் ஆசியாவின் தலைமைச் செயல் அதிகாரியான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டசிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயரர் பரிந்துரை செய்துள்ளார்.

மலேசியா விமான நிறுவனம் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பு டோனியிடம் வழங்க வேண்டும். அதோடு அரசாங்கம் இதில் தலையிடக்கூடாது என்றும் ராயர் கேட்டுக்கொண்டார்.

அந்த நிறுவனத்திற்கு டோனி லாபம் கொண்டு வர முடியுமா என்பதை நாம பார்க்க வேண்டும் என ராயர் வலியுறுத்தினர்.

இது அணு அறிவியல் அல்ல .மலேசியா விமான நிறுவனத்தை ஒப்பிடுகையில் ஏர் ஆசியாவிற்கு குறுகிய காலத்தில் டோனி லாபத்தை தேடித்தந்துள்ளார் என நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராயர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன