பிரிக்பில்ஸ், ஆக. 16
விஐபி2 திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் தலைநகர் என்.யூ. சென்ட்ரலில் நடந்தது, இந்த முன்னோட்டத்திற்கு முன்னதாக மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக், அன்பு இல்லம், தனித்து வாழும் தாய்மார்கள் இல்லம், பேறு குறைந்தவர்கள் இல்லம் ஆகியவற்றுக்கு உதவிகளை வழங்கினார்.
கலைப்புலி எஸ்,தாணு தயாரிப்பில், சௌதர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள விஐபி2 தனுஷ் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தப் படத்தை மலேசியாவில் மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ளது
கலைத்துறையில் துரித வளர்ச்சியை பெற்று வரும் மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் சமுதாய சேவையிலும் தனி முத்திரை பதித்து வருகின்றது. இந்நிலையில் இந்த விஐபி2 திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியில் 100 அன்பு இல்ல பிள்ளைகளைக்கு இலவசமாக படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வழங்கப்பட்டது.
இறைவனின் அருளால், மாலிக் ஸ்ரிம் நிறுவனம் பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றி கண்டு வருகின்றது. இத்தருணத்தில் இயலாதவர்களையும் மறந்து விடக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் நாங்கள் செய்யும் பல சேவைகளை வெளியில் சொல்வது கிடையாது என டத்தோ அப்துல் மாலிக் கூறினார்.
திரைப்படங்களை அனைவரும் விரும்புகிறார்கள். இந்நிலையில் அன்பு இல்ல குழந்தைகளையும் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களையும் எங்கள் மகிழ்ச்சியில் இணைத்துக் கொண்டு, அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இனி வரும் காலங்களிலும் மாலிக் ஸ்ரிம் நிறுவனத்தின் சமுதாய சேவை தொடருமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியீடு கண்ட விஐபி2 திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையிடப்பட்டிருக்கின்றது. குடும்பத்தாருடன் பார்க்கக்கூடிய திரைப்படமாக விஐபி2 உருவாக்கப்பட்டுள்ளது.
