திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இங்கிலீஷ் பிரிமியர் லீக்கை மென்செஸ்டர் சிட்டி வெல்ல வேண்டும் – ரியோ பெர்டினான்ட்
விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கை மென்செஸ்டர் சிட்டி வெல்ல வேண்டும் – ரியோ பெர்டினான்ட்

லண்டன், மார்ச்.22-

2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றுவதில் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூலுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வரும் வேளையில், மென்செஸ்டர் சிட்டி அக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என மென்செஸ்டர் யுனைடெட் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் ரியோ பெர்டினான்ட் தெரிவித்துள்ளார்.

மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களைப் பொறுத்தவரை லிவர்பூல் அந்த கிளப்பின் பரம வைரியாகும். அதேவேளையில் ஓர் ஆட்டக்காரராக மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இடம்பெற்றிருந்த தாமும் அதே நிலையில்தான் இருப்பதாக பெர்டினான்ட் கூறினார்.

ஒருவேளை, லிவர்பூல் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு அது பேரிடியாக இருக்கும் என பெர்டினான்ட் கூறினார். ஆக கடைசியாக லிவர்பூல் 1990 ஆம் ஆண்டில் லீக் பட்டத்தை வென்றது.

கடந்த 29 ஆண்டுகளாக லீக் பட்டத்தை வெல்ல போராடி வருகிறது. இவ்வேளையில் கடந்த 20 ஆண்டுகளாக காணாமல் போன லிவர்பூல் ரசிகர்கள் எல்லாம் இப்போது பிரீமியர் லீக் போட்டியில் தங்களின் அணியின் சிறப்பை பற்றி பேசுவது தம்மால் ஏற்று கொள்ள முடியவில்லை என பெர்டினான்ட் கூறினார்.

மென்செஸ்டர் சிட்டியும், மென்செஸ்டர் யுனைடெட்டின் வைரி என்றாலும் அந்த அணி பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்வதை தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரீமியர் லீக் பட்டியலில் லிவர்பூல் தற்போது முதலிடத்தில் உள்ளது. நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் இருக்கிறது. எனினும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் ஓர் ஆட்டத்தில் கூடுதலாக விளையாடியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன