கோலாலம்பூர் மார்ச் 22-

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2019 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தமது வாக்குறுதியை வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது என புறநகர் மேம்பாட்டு துணை அமைச்சர் சிவராசா தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கம் அதைப் பற்றி பேசிய போதும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காட்டு இடம் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என அரசாங்கம் தமது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்த போது சில அதிர்ச்சிகரமான முடிவுகளை காண முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படிவம் ஒன்று தொடங்கி படிவம் 5 வரையில் மொத்தம் 285 இந்திய மாணவர்கள் மட்டுமே நாடு முழுமையும் உள்ள 54 எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் பெறுகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளித்தது. எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் இணையும் மாணவர்கள் எண்ணிக்கை 10,000 என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலை மாறுவதற்காக தமது தலைமையில் 25 என்று அழைக்கப்படும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பின் ஆதரவுடன் எம்ஆர்எஸ்எம் கல்லூரிகள் குறித்தும் அதில் கல்வி கற்பதன் வழி கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அவர் நினைவுகூர்ந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் துணையமைச்சர் சிவராசா

அதன் காரணமாக கடந்த ஈராயிரத்து பதினெட்டாம் ஆண்டு வரும் ஏற்று 810 ஆக மட்டுமே இருந்த படிவம் 1 முதல் படிவம் 4 வரையிலான இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் இவ்வாண்டு 2670 ஆக அதிகரித்துள்ளது. அதில் 1875 விண்ணப்பங்கள் படிவம் ஒன்று காகவும் 795 விண்ணப்பங்கள் படிவம் 4 நூலைவிற்கவும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதில் மார்ச் 5ஆம் தேதி வரை 847 இந்திய மாணவர்களுக்கு (637 படிவம் 1 & 210 படிவம் 4) நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 377 இந்திய மாணவர்கள் மட்டுமே இக்கல்லூரிகளில் பயில்வதற்கு பகிர்ந்து கொண்டுள்ளனர். பல்வேறு காரணங்களுக்காக மீதம் உள்ள 470 மாணவர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் அரசாங்கம் மாற்றம் காண்பதற்கு முன்னதாக அனைத்து எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளிலும் படிவம் ஒன்று தொடங்கி படிவம் 5 வரை பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை விட இவ்வாண்டு கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என சிவராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே வாய்ப்பினை ஏற்றுக் கொண்டுள்ளது குறித்து தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். எம்ஆர்எஸ்எம் கல்லூரிகள் குறித்து இந்திய சமூகத்தினரிடைதாங்கள் கேட்ட துறை கேட்ட கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் அமைச்சை தொடர்பு கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து மேல்முறையீடு செய்ய வேண்டுமென சிவராசா தெளிவுபடுத்தினார்.

மேலும் இந்திய மாணவர்களை தவிர்த்து 320 இதர பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 114 பேர் மட்டுமே அந்த வாய்ப்பு ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன்வழி 2019 ஆம் ஆண்டு 1167 பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கியதன் வழி 10 விழுக்காட்டு வாய்ப்பினை மாரா பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது.

அந்த வாய்ப்பினை ஏற்றுக்கொள்ளாத அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் சமூகத்தினர் மத்தியில் எம்ஆர்எஸ்எம் கல்லூரிகள் குறித்த புரிதல் எதிர்காலத்தில் மாறும் எனும் நம்பிக்கை தங்களுக்கு உள்ளது என்றார் அவர்.

2019 ஆம் கல்வி ஆண்டிற்கான எம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இவ்வாண்டு ஜூன் வரை தொடரும் என்பதால் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து மாற்றம் காணும். சில புதிய மாணவர்கள் கல்லூரியில் இணைவதும் சில மாணவர்கள் கல்லூரியை விட்டு விலகுவதும் தொடரும் என்பதால் துல்லிதமான மாணவர் எண்ணிக்கை ஜூன் மாதத்திற்கு பிறகு உறுதிப்படுத்தப்படும் என சிவராசா தெரிவித்தார்.

அதோடு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என சிவராசா நம்பிக்கை தெரிவித்தார்.