ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > டைலிஜிஸ் செய்யக் கூடியவர்களுக்கு உலகில் மலேசியா இரண்டாவது இடம்! – பி.எம்.சி. டாக்டர் சுப்பிரமணியம் தகவல்
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

டைலிஜிஸ் செய்யக் கூடியவர்களுக்கு உலகில் மலேசியா இரண்டாவது இடம்! – பி.எம்.சி. டாக்டர் சுப்பிரமணியம் தகவல்

கம்பார், மார்ச் 22-

நாட்டில் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக பேராக் மெடிக்கல் செண்டர் (பி.எம்.சி) கிளினிக்கின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. சுப்பிரமணியம் கூறினார்.  ஆய்வுகள் படி நீரிவு நோய்க்கு ஆளாகி சிரு நீரக கோளாரினால் அவதியும் மலேசியாவில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதில் உலகில் சிறுநீரக சுத்தகரிப்பு ( டைலிஜிஸ்) செய்வோரின் எண்ணிக்கையில் மலேசியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் மெக்சிகோ உள்ளது.  இந்த நிலைமைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்ட போதிலும் அரசு சாரா இயக்கங்கள் இதில் தொடர்ந்து முனைப்பு காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இங்கு கம்பார் சென்டரில் புதியதாக திறக்கப்பட்ட பி.எம்.சி. கிளினிக் திறப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் அவர் தெரிவித்தார். வழக்கமான சிறு நீ

ர் நோய் கண்டவர்கள், மருத்துவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவேண்டும். அதைவிடுத்த அந்த நோ

யை கட்டுப்படுத்த பல்வேறு வகையான மாற்று மருந்துகளை உட்கொண்டு சீரு நீரக கோளாருக்கு ஆளாகி பின்னர் மீண்டும் மருத்துவர்களை நாடி வருவதையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

ஆக அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக இந்த நீரிழிவு நோய்க்கு ஆளாகும் பலர் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் கண்பார்வை , இருதய கோளாருகள் உட்பட பல நோய்களின் மிரட்டலுக்கு ஆளாக நேரிடுவோம் என்றார்.

கடந்த காலங்களில் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகமான நோயாளிகளைக் காண முடியாது.
இன்று எந்த மருத்துவ மனைகளில் அதிகமான நோயாளிகளைக் காண முடியாது.  இன்று எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இடம் இன்றி நோயாளிகள் காத்துகிடக்கின்றனர். இதனை உணர்ந்து பொது மக்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இங்கு திறக்கப்பட்டுள்ள பி்.எம்.சி. கிளினிக் நான்காவது கிளையாகும் . இதனை ஓராங்க பெசார் ஜாஜாஹான் கம்பாரைச் சேர்ந்த தோ செடேவா ராஜா டத்தோ அப்துல் தாலிப் அப்துல் பாமி அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து வாழ்துரை வழங்கினார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த கிளினிக் ஈப்போவில் இரண்டும் , பத்துகாஜாவில் ஓன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நான்கு கிளினிக்குகளில் 55 பணியாளர்கள் உள்ளனர்.  பி்.எம்.சி. கிளினிக் தனியார் கிளிக்காக இருந்தாலும் சமுக நல உதவிகள் செய்து வருவது பலருக்கு தெரியாது. பல ஆண்டுகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவிகள் செய்து வருவதையும் அவர் குறிப்பிட்டார் .

……………………………………………………………………………………………………..

விளம்பரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன