ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > **மாத்தி யோசி** விமான பராமரிப்பு லைசன்ஸ் இருந்தால் கை நிறைய சம்பளம் பெறலாம்!
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

**மாத்தி யோசி** விமான பராமரிப்பு லைசன்ஸ் இருந்தால் கை நிறைய சம்பளம் பெறலாம்!

எஸ்.பி.எம் முடித்த மாணவர்களே! உங்கள் தேர்வு முடிவு அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை என்று கவலைப்பட வேண்டாம். நன்றாக யோசியுங்கள், ஏதோ ஒரு துறையில் டிப்ளோமா படித்து விட்டு பின்னர் வேலைக்கு அலைவதால் பலன் ஏதுமில்லையே. அப்படி செய்வதால் செலவும் மன உளைச்சலும் தான் மிஞ்சுகின்றன.

அதிக வருமானத்தை ஈட்டித் தரும் துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும். அது தான் புத்திசாலி தனம். அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது உங்கள் கனவா? இருக்கவே இருக்கு விமான பராமரிப்பு லைசன்ஸ் கல்வித் துறை. பயிற்சியில் கலந்துக் கொண்டு தேர்வு பெறுபவர்களுக்கான லைசன்சை மலேசிய விமான போக்குவரத்து துறை வழங்குகிறது.

உங்களுக்கு பொருத்தமான தொழில்நுட்ப கல்வியை தேர்ந்தெடுத்து படித்தால், உங்கள் தகுதியும் உயரும், கை நிறைய சம்பளம் கிடைப்பதும் உறுதி. தெரியுமா உங்களுக்கு? விமான பராமரிப்பு தொழில் நுட்ப துறை கல்வி, 3 ஆண்டுகளுக்கான சிறப்பு லைசன்ஸ் பெறுவதற்கான கல்வியாகும்.

விமானங்களை பராமரிப்பதற்கு லைசன்ஸ் அவசியமாகும். லைசன்ஸ் இருந்தால் மட்டுமே விமானங்களை தொட அனுமதிக்கப்படுகிறது.  மூன்று ஆண்டுகள் விமான பராமரிப்பு தொழில் நுட்ப கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு விமான பராமரிப்பாளர் (aircraft maintenance) எனும் சிறப்பு லைசன்ஸ் வழங்கப்படுகிறது.

பயிற்சி முடிந்து லைசன்ஸ் கிடைத்தவுடன் வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. வேலையும் எளிதாக கிடைத்துவிடுகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல உலகின் எந்தப் பகுதியிலும் வேலை செய்யலாம். விமான பராமரிப்பாளர் பயிற்சியை செய்துக் கொண்டிருக்கும் போதே, விமான நிறுவனங்கள் பயிற்சி மாணவர்கள் காட்டும் திறமையையும் ஆர்வத்தையும் பார்த்து பயிற்சி காலம் முடிவதற்குள்ளாகவே அவர்களை வேலைக்கு எடுக்க தொடங்கி விடுகிறார்கள்.

நம்மில் பலருக்கு இப்படி பராமரிப்பாளர் துறைக்கான லைசன்ஸ் இருப்பது தெரிவதில்லை.  ஐந்தாம் படிவம் முடித்த பின்னர், படிப்பை தொடர வேண்டும் என்ற ஆசையில், ஏதாவது ஒரு டிப்ளோமா கல்விய தேர்வது சரியல்ல. அது, அதிக வருமானத்தை ஈட்டித் தரும் துறையா என்று யோசிக்க வேண்டும்.

சுமாரான தேர்ச்சியுடன் எஸ்.பி.எம் கல்வி தகுதி இருந்தாலே போதும், விமான பராமரிப்பு பயிற்சியில் சேர்ந்து விடலாம். அதிக வருமானம் ஈட்டித் தரும் முன்னணி தொழில் துறைகளில் விமான பராமரிப்பு தொழில் நுட்பம் மிக துரிதமாக மேம்பாடு அடைந்து வருகிறது.

அடுத்து வரும் 10 ஆண்டுகளில் சுமார் 32 000 புதிய வேலை வாய்ப்புகள் இந்த துறையில் உருவாகும் என்று மலேசிய வின்வெளி பெருந்திட்ட அறிக்கை (The Malaysian Aerospace Industry Blueprint 2030) கூறுகிறது. ஆர்வமுள்ள இளையோர் மேல் விவரங்களைப் பெற தொடர்புக் கொள்ள வேண்டிய எண்கள் 012-709 7121  திரு. சின்னப்பர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன