அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > 4ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இந்திய சிறுவன் மரணம்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

4ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இந்திய சிறுவன் மரணம்

புக்கிட் மெர்தாஜம், மார்ச் 24-

புக்கிட் மெர்தாஜம், தாமான் லீமாவ் மானிசிலுள்ள உள்ள ஒரு அடுக்ககத்தின் 4ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த மனவளர்ச்சி குன்றிய இந்திய சிறுவன் மரணமடைந்தான்.

இச்சம்பவம் நேற்று காலை 9.20 மணியளவில் நிகழ்ந்ததாவும் எஸ்.ராஜ்வீர் (வயது 9) எனும் அந்த சிறுவன் தனது பெற்றோர், இரு சகோதரர்கள் மற்றும் அத்தையுடன் வசித்து வந்ததாகவும் செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் ரோஸ் அஸ்லான் நிக் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

அச்சிறுவன் இரும்பு கம்பி இல்லாத வீட்டின் சமையலறை ஜன்னலிலிருந்து கீழே குதித்ததாகவும் அவரது உடல் சவப்பரிசோதனைக்காக செபெராங் பிறை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன