சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி; இந்தியா-கொரியா சமநிலை!

0
5

ஈப்போ, மார்ச் 24-

சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் இந்தியா கொரியாவிடம் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டது.

இதில் இந்தியாவிற்கான முதல் கோலை 28ஆவது நிமிடத்தில் அதன் ஆட்டக்காரர் மண்டிப் சிங் அடித்தார்.

இங்கு கடும் மழை பெய்ததால் 45 நிமிடத்திற்குப் பின்னர் ஆட்டம் தொடங்கியது.

இதில் கொரியாவிற்கு 60 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வழி அதன் ஆட்டக்காரர் ஜோங்யூன் ஜாங் கோலை அடித்தார்.

நாளை மறுநாள் ஆட்டங்கள தொடரும் அதில் மலேசியா இந்தியாவுடன் களம் காண உள்ளது. ஜாப்பான் கனடா மற்றும் போலந்துடன் கொரியா மோத உள்ளது.