ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > பழனி அருகே கார் விபத்து; மலேசியர்கள் உட்பட மூவர் பலி
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

பழனி அருகே கார் விபத்து; மலேசியர்கள் உட்பட மூவர் பலி

பழனி, மார்ச் 24-

பழனியின் நிகழ்ந்த கார் விபத்தில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோலாலம்பூரைச் சேர்ந்த சின்னக்கண்ணு, அவரது மனைவி ஈஸ்வரி, மகன்கள் சஞ்சய், பழனி, சரவணன், மகள்கள் சங்கவி, மஞ்சிகா என 5 பிள்ளைகளுடன் பழனி கோவிக்கு வந்திருந்தார்.

நேற்று அதிகாலை தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்தனர். தரிசனை முடிந்தப் பின்னர் பழனி கொடைக்கானல் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர்கள் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஈஸ்வரி, மகன் சஞ்சய், கார் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காயமடைந்த பழனி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சரவணன், சங்கவி, மஞ்சிகா ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன