ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஹெரி இண்டர் நெஷனலின் பினாங்கு மாநில அழகு ராஜா – ராணி போட்டி !
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஹெரி இண்டர் நெஷனலின் பினாங்கு மாநில அழகு ராஜா – ராணி போட்டி !

கோலாலம்பூர், மார்ச்.25-

பல வருடங்களாக நாட்டில் பல புகழ் பெற்ற அழகு ராணி – ராஜா போட்டிகளை நடத்திவரும் ஹெரி இண்டர்னெஷனல் நிறுவனம் இம்முறையும் மாநில, தேசிய ரீதியில் போட்டிகளை நடத்துகின்றது.

அவ்வகையில் பினாங்கு மாநிலத்திலும் இந்த திரு “ஹிட்”, குமாரி “ஹிட்”, திருமதி “ஹிட்” ஆகிய பிரிவுகளில் அழகு போட்டிகளையும் அந்த நிறுவனம் இவ்வருடமும் நடத்துகின்றது. அதன் அடிப்படியில் இந்த பிரிவு போட்டிகளுக்கு கடந்த மாதத்தில் இம்மாநிலத்தில் தேர்வு சுற்றுகள் நடத்தப்பட்டன.

100க்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். அழகு கலை துறையில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள் பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த தேர்வு சுற்றில் தேர்வு பெற்ற மொத்தம் 30 போட்டியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் பினாங்கில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் போட்டியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பட்டை வழங்கப்பட்டது.  இப்போட்டியின் ஏற்பாட்டாளர் ஹெரி அவர்களுக்கு பட்டையை அணிவித்தார். இதன் வழி இந்த மூன்று பிரிவுகளின் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கி விட்டது. இதன் இறுதி சுற்று ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதுவரை போட்டியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி பட்டறை, சுற்றுகள் நடைபெறும். மேலும் அவர்கள் சமூக சேவை நிகழ்வுகளிலும் கலந்து கொள்வர். நடைபெறவுள்ள இறுதி சுற்றில் வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படுவது மற்றுமின்றி அவர்களின் எதிர்காலமும் பிரகாசிக்க வகை செய்யப்படும் என ஹெரி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன