சீ போட்டி: தனபாலன் கோலினால் சிங்கப்பூரை வீழ்த்தியது மலேசியா

0
4

கோலாலம்பூர், ஆக. 16-

     29ஆவது சீ விளையாட்டு போட்டிக்கான கால்பந்து போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்ட மலேசிய அணி 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

     மிகவும் பரப்பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய ஆட்டக்காரர் தனபாலன் அடித்த கோல் மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தது. முதல்பகுதி ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் அஸ்ரப் தனது அணிக்கான முதல் கோலை அடித்து சிங்கப்பூரை முன்னிலை வகிக்க செய்தார்.

     பிற்பகுதியாட்டத்தில் ஆட்டத்தை சமப்படுத்த மலேசியா கடுமையான தாக்குதல்களை தொடர்ந்தது. அதன் பலனாக, ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் அடாம் அஸ்லின் மலேசியாவிற்கான முதல் கோலை புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.

     தொடர்ந்து, ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் தனபாலன் மலேசியாவின் இரண்டாவது கோலை அடித்ததோடு மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டத்தை சமப்படுத்த சிங்கப்பூர் இறுதிவரை போராடிய போதும் தோல்வி கண்டது.

     மற்றொரு ஆட்டத்தில் லாவோசை எதிர்கொண்ட மியன்மார் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இரண்டு ஆட்டங்களை முடித்துள்ள மியன்மாரும் மலேசியாவும் முறையே 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.