ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > பழனியில் கார் விபத்து காயமடைந்த மற்றொரு மலேசிய சிறுவன் மரணம்!
உலகம்குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பழனியில் கார் விபத்து காயமடைந்த மற்றொரு மலேசிய சிறுவன் மரணம்!

பழனி. மார்ச் 25-

பழனி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஈஸ்வரி(வயது 38) என்ற குடும்ப மாதுவும் அவரது மூத்த மகன் சஞ்சய் (வயது 15) உட்பட மூவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.

இந்த விபத்தில் ஈஸ்வரியின் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவரான தேவானந்தா என்ற பழனி (வயது 10) கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

கிள்ளான தாமான் செந்தோசாவைச் சேர்ந்த திருமதி ஈஸ்வரியும் அவரது மூன்று மகன்களும் இரண்டு பெண் பிள்ளைகளும் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு திருச்சி சென்றனர். திருச்சியில் இருந்து வாடகை காரில் பழனிக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பிய அவர்கள் பின்னர் உணவருந்த சென்றனர். அப்போது அவர்கள் பயணம் செய்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வாகன ஓட்டுனரும் அதே இடத்தில் இறந்தார்.

சனிக்கிழமையன்று மாலை 5 .30 மணிக்கும் 6 மணிக்குமிடையே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து குறித்த செய்தியை அறிந்தவுடன் ஈஸ்வரியின் கணவர் சின்ன கண்ணன் உடனடியாக சென்னை விரைந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

தமது மனைவி  ஈஸ்வரி பிள்ளைகளான சஞ்சய் மற்றும் தேவானந்தா ஆகியோரின் உடல்களை மலேசியாவிற்கு கொண்டு வதற்கான மும்முரமான ஏற்பாடுகளை அவர் செய்து வருதாகவும் கூறப்பட்டது. அனேகமாக நாளை அவர்களது உடல்கள் மலேசியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் ஈஸ்வரியின் பிள்ளைகளான சங்கவி( வயது 15), வன்சிகா ( யது 5) இரட்டை பிள்ளைகளில் ஒருவரான தேவேந்திரன்(வயது 10) ஆகியோர் உயிர் உயிர் தப்பினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன