திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > விடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்! -விரிவுரையாளர் ஜெயகுமார் வலியுறுத்து
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

விடா முயற்சியும் தன் நம்பிக்கையும் வெற்றிக்கு வழி வகுக்கும்! -விரிவுரையாளர் ஜெயகுமார் வலியுறுத்து

கோப்பெங் மார்ச் 25-

மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்ததொரு நிலையை அடைய விடா முயற்சியும் தன் நம்பிக்கையும் அவசியம் என்று தனியார் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக சேவையாற்றி வரும் எஸ். ஜெயகுமார் வலியுறுத்தினார்.

எதிர்கால சவால்களை சமாளிக்க மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டத்தை செலுத்தவேண்டும். அதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் , அவர்களின் தேவைகளை நிறைவு செய்யவேண்டும் , அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டும் என்றார்.

இங்குள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் , கோப்பெங் இந்து இளைஞர் இயக்கம் மற்றும் கோப்பெங் விளையாட்டு கழக ஏற்பாட்டில் முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கல்வி யாகம் நிகழ்வில் ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்தார்.

இன்று நாடு எதிர்நோக்கி வரும் பல்வேறு சவால்களை நாம் காணுகின்றோம் . நாட்டின் சூழ் நிலையை கருத்தில் கொண்டு நாம் நம்முடைய செயல்பாடுகளில் மாற்றங்களை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இங்கு நடைபெற்ற இந்த கல்வி யாகத்தில் சுமார் 700 மாணவர்கள கலந்துக்கொண்டது வலராற்று பதிவு என்று ஏற்பாட்டுக் குழுவினர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற பிரதிநிதிகள், அரசு சாரா இயக்க தலைவர்கள மற்றும் பொது மக்கள பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு பேராதரவு வழங்கினர். இங்கு இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு சார்பில் அதன் ஒருங்கிணப்பாளர் தி. கார்த்திபன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன