அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மணிலா சீ போட்டி: தேசிய பயிற்சிக்கு 14 கராத்தே வீரர்களுக்கு அழைப்பு!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மணிலா சீ போட்டி: தேசிய பயிற்சிக்கு 14 கராத்தே வீரர்களுக்கு அழைப்பு!

கோலாலம்பூர் மார்ச் 26

எதிர்வரும் டிசம்பர் மாதம் மணிலாவில் நடைபெறவிருக்கும் சீ போட்டிக்கான கராத்தே தேசிய குழுவுக்கான பயிற்சியில் பங்கேற்கும்படி 14 கராத்தே வீரர்களுக்கு மலேசிய கராத்தே சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த தேசிய கராத்தே போட்டிக்கு பிறகு இந்த கராத்தே வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் கராத்தே வீரரான 33 வயதான குணசீலனும் ஒருவராவார். பள்ளி தேகப் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வரும் குணசீலன் 60 கிலோ உட்பட்ட ஆண்களுக்கான கும்மிதே கராத்தே பிரிவில் சீ போட்டியில் தங்கம் பெறவேண்டும் என்ற இலட்சியத்தோடு பயிற்சியில் பங்கேற்று வருகிறார்.

ஏற்கனவே சீ போட்டியில் தங்கம் வென்றுள்ள குணசேகரனுடன், நிஷா அழகேசன் உட்பட 14 கராத்தே போட்டியாளர்கள் தேசிய பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 60 கிலோ பிரிவில் குணசீலன் வெள்ளிப்பதக்கத்தையும் நிஷா 55 கிலோ  பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

2006 ஆம் ஆண்டு டோவாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் குணசீலன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தேசிய குழுவிலிருந்து விலகினார். எனினும் கராத்தே தற்காப்பு கலையில் இருந்து அவர் முற்றாக விழகவில்லை.

2013கஆம் ஆண்டு சீ போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதன் பிறகு தேசிய குழுவில் இடம் பெறவில்லை. எனினும் பயிற்சியில் தான் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக  குணசீலன் கூறினார்.

நான் சுயமாக கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். சொந்தமாக தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்று வருகிறேன். எனது இரத்தத்தோடு கராத்தே கலந்து விட்டது என குணசீலன் தெரிவித்தார். இந்த வேளையில் எனது முன்னாள் பயிற்சியாளர் ஆனந்தன், துரைராஜ், பிரேம்குமார், மற்றும் எனது முன்னாள் தேசிய பயிற்சியாளர் என பி அறிவழகன் ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருப்பதாக குணசீலன் கூறினார்

தேசிய கராத்தே குழுவில் முன்னாள் கேப்டனுமான குணசீலன் அடுத்த மாதம் லாவோஸில் நடைபெறும் தென்கிழக்காசிய கராத்தே போட்டியில்  பங்கேற்க போகிறார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன