அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டி ! மலேசியா வெல்லுமா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டி ! மலேசியா வெல்லுமா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஈப்போ மார்ச் 26

இங்கு நடைபெற்ற வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் மலேசியா இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர் . இற்றிரவு 8.30 மணிக்கு மலேசியா இந்தியாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டத்தின் வழி மலேசியாவின் அதன் கனவு நிறைவேறுமா என்று தெரிந்து விடும்.

இந்த ஆண்டு மலேசியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்று பெரிதும் எதிர்ப்பர்தாபக மாநில இந்தியர் கால் பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் கூறினார். இது வரை மலேசிய தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி மலேசியா போலந்தை 5-1 என்ற கோல் எண்ணிக்கையிலும் , ஜப்பானை 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்தியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற வேண்டுமென பள்ளிவாசலில் பிரார்த்தனை நடந்தபோது…

இவ்விரு வெற்றியின் வழி மலேசியா தொடர்ந்து முன்னேறும் என்ற நம்பிக்கையை அதன் ரசிகர்கள கொண்டுள்ளனர்.  இந்தியா இது வரை விளையாடிய ஆட்டத்தில் ஐப்பானை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி , கொரியாவுடன் 1-1 என்ற சம நிலை கோல் எண்ணிக்கையில் உள்ளது.

இங்கு இந்தப் போட்டி கடந்த 1983 ஆம் தொடங்கியது. அதில் 1985 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுடன் இறுதி சுற்றில் களம் கண்டு தோல்விக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன