மருத்துவமனைக்குள் புகுந்து 6 பேரை கொன்று நண்பரை மீட்ட கும்பல்

0
9

கவுதமாலா சிட்டி, ஆக 17-

கவுதமாலா நாட்டில் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு வந்த தங்களது நண்பரை சினிமா பாணியில் கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தி மீட்டுள்ள சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் செயல்பட்டு வரும் மரா சல்வாட்ர்சா என்ற கிரிமினல் கும்பலைச் சேர்ந்த ஆண்டர்சன் டேனியல் என்பவன் சிறையில் இருந்துள்ளான். உடல்நலக்குறைவு காரணமாக கவுதமாலா சிட்டியில் உள்ள மருத்துவமனைக்கு ஆண்டர்சன் சிகிச்சைக்காக வருவதை அறிந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் நேற்று துப்பாக்கியுடன் அங்கு புகுந்தனர்.

அங்கிருந்த போலீஸ் மற்றும் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட கும்பல், ஆண்டர்சனை மீட்டுச் சென்றனர். இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பாக மரா சல்வாட்ர்சா கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்துள்ளதாக அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.