ஜொகூர் பாரு மார்ச் 28-

இந்திய சமூகத்தினர் ஈமச்சடங்குகள் செய்வதற்காக 1.9 ஏக்கர் நிலப் பகுதியை ஒதுக்குவதற்கு ஜோகூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் இத்தகவலை வெளியிட்டார்.

ஏற்கனவே தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் ஈமச்சடங்குகள் நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ரத்து செய்ததன் மூலம் நம்பிக்கை கூட்டணி தலைமையிலான ஜோகூர் அரசாங்கம் சிறுபான்மை இந்தியர்களின் நலன்களை புறக்கணிப்பதாக ஜோகூர் முன்னாள் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் கூறியிருந்ததை ராமகிருஷ்ணன் நிராகரித்தார். இப்படி ஒரு குற்றச்சாட்டு அபத்தமானது என அவர் சொன்னார்.

தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கிய நிலம் தஞ்சோங் லங்சாட் துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் அந்த இடம் ஈமச்சடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு பொருத்தமானதாக இல்லை என டாக்டர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

1.9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட புதிய நிலப்பகுதியை திங்கட்கிழமையன்று ஜொகூர் மந்திரி புசார் ஒஸ்மான் சபியான் நேரடியாக சென்று பார்வையிட்ட தாக ராமகிருஷ்ணன் கூறினார்.

ஈமச்சடங்கு நடத்துவதற்காக தே.மு அரசு வழங்கிய நிலத்தை ரத்து செய்வதா?முகமட் காலிட் நோர்டின் சாடல்

ஜோகூரில் இந்திய சமூகம் ஈமசடங்கு செய்வதற்கான புதிய நிலம் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பாசீர் கூடாங் நகராண்மைக் கழகம் மேற்கொள்வதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.