பத்து பகாட், மார்ச் 28-

பண்டார் புத்ரா இண்டாவிலுள்ள தமது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆடவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஏ.சி.பி அஷான் அப்துல் ஹலிம்

மார்ச் 18ஆம் தேதி மாலை 5.30 அளவில் 37 வயது ஆடவர் ஒருவர் காணாமல் போனதாக கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ்காரரின் வீட்டின் பின்புற பகுதியில் அந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அஷான் அப்துல் ஹலிம் இதனைத் தெரிவித்தார்.