ரந்தாவ் இடைத்தேர்தல் சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல்!

கோலாலம்பூர் மார்ச் 29-

ரத்தாவ் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் மையத்திற்கு 50 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் தொண்டர்களும் காத்திருப்பது அல்லது அங்கு நிற்க கூடாது என தேர்தல் ஆணைக்குழு தலைவர் அஸார் அஸிஸ் ஹருன நினைவுறுத்தி உள்ளார்.

சனிக்கிழமை காலை 9 மணி 9 மணி முதல் 10 மணி வரை சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெறும். ஸ்ரீ செண்டாயான் சீன தொடக்கப்பள்ளியில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும்.

வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு, போலீஸ் மற்றும் ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளை பின்பற்றும் படி அனைத்து தரப்பினரையும் அஸார் அஸிஸ் கேட்டுக்கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் டாக்டர் ஸ்ரீராம் மற்றும் தேசிய முன்னணியின் சார்பில் நெகிரி மாநில முன்னாள் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.