அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஹிட் அழகு போட்டியின் தனித் திறமை சுற்று! ஆடல் – பாடல் – நடிப்பு என பன்முகத்தை வெளிப்படுத்திய போட்டியாளர்கள்
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஹிட் அழகு போட்டியின் தனித் திறமை சுற்று! ஆடல் – பாடல் – நடிப்பு என பன்முகத்தை வெளிப்படுத்திய போட்டியாளர்கள்

கோலாலம்பூர், மார்ச். 29-

பல வருடங்களாக நாட்டில் பல புகழ் பெற்ற அழகு ராணி – ராஜா போட்டிகளை நடத்திவரும் ஹெரி இண்டர்னெஷனல் நிறுவனம் இவ்வருடமும் பல போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது. அவ்வகையில் திரு “ஹிட்”, குமாரி “ஹிட்”, திருமதி “ஹிட்” ஆகிய பிரிவுகளில் அழகு போட்டிகளையும் அந்த நிறுவனம் இவ்வருடமும் நடத்துகின்றது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னமே இப்போட்டிக்கான பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்த மூன்று பிரிவுகளிலும் மொத்தமாக 42 பங்கேற்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆயினும் இறுதிச் சுற்று போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 3 போட்டியாளர்களே களம் இறங்குவர்.

அவ்வகையில் இந்த 42 போட்டியாளர்களில் இறுதி போட்டியின் தனித் திறன் சுற்றுக்கு தகுதி பெறுபவர்களை தேர்வு செய்யும் சிறப்பு சுற்று போட்டி ( ஹிட்ஸ் கிரேட்டஸ் ஷோ) அண்மையில் நடைபெற்றது.

போட்டியாளர்கள் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் இந்த சிறப்பு சுற்று போட்டி தலை நகர் தாமான் வாஹ்யுவில் உள்ள “ ஸ்கை ஆர்க் ஈவண்ட் ஸ்பேஸ்” (லேக் வில்லி லைப் ஸ்டைல்) எனுமிடத்தில் காலை 10 மணி தொடங்கி நடைபெற்றது. இந்த சுற்றில் 42 போட்டியாளர்களும் ஆடல், பாடல், நடிப்பு, தற்காப்பு கலை, என தங்களின் தனித் திறமைகளை இந்த சுற்றில் வெளிப்படுத்தினர்.

பாடகர்கள் சைக்கோமந்திரா , காயத்திரி தண்டபாணி, நடன இயக்குனர்கள் மணிமாறன், பட்ரோல், இந்தோனிசியாவைச் சேர்ந்த பண்முக கலைஞர் லக்கி ஜோ ஆகியோர் இந்த சுற்றுக்கு நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.

அவ்வகையில் இறுதி சுற்றின் தனித் திறன் சுற்றுக்கு “திரு” ஹிட் பிரிவில் சுடேவ் முருகன், கோகுலன் ராஜேந்திரன், கார்த்திகேசன் விஸ்வநாதன் ஆகியோரும் “குமாரி” ஹிட் பிரிவில் ரொபேர்த்தா ரேனுகா, அன்னுரி ராஜ், துர்காஷினி குணாளன் ஆகியோர் தேர்வு பெற்றனர். அதே நேரம் “திருமதி” ஹிட் பிரிவில் புவனா அருட்செல்வன், எஞ்சலிகா, ஏமி நூர் தியாரா ஆகியோருன் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இம்மூன்று பிரிவுகளின் இறுதி சுற்றுப் போட்டி வரும் ஏப்ரல் 20ஆம் தேதி மாலை மணி 6 தொடங்கி ஷா ஆலம் திஎஸ்ஆர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதி சுற்றில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு 24,000.00 வெள்ளி வரையிலான ரொக்க / பொருள் பரிசுகளும் 126,000.00 வெள்ளி மதிப்பிலான கல்வி உபகாரச் சம்பளமும் வழங்கப்படவுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன