முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசிய ஹாக்கி குழுவின் பலவீனங்கள் களையப்பட வேண்டும்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசிய ஹாக்கி குழுவின் பலவீனங்கள் களையப்பட வேண்டும்

கோலாலம்பூர் மார்ச் 30-

மலேசியா ஹாக்கி குழுவின் பலவீனங்கள் உடனடியாக களையப்பட வேண்டும். ஹாக்கி விளையாட்டில் எளிதாக வெற்றியை உறுதிப்படுத்த கூடிய பெனால்டி கானரை கோலாக்கும் நிபுணத்துவம் மலேசிய குழுவுக்கு உடனடி அல்லது அவசியம் தேவையாகும்.

தற்போது நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் மலேசியக் குழு வெற்றி பெற முடியாமல் போனதற்கு பெனால்டி கார்னரை கோல் அடிக்க முடியாமல்  இருந்த பலவீனங்கள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது .

தேசிய ஹாக்கிக் குழுவின்  பயிற்சியாளர் ஹாலாந்தின் ரோலன் ஒல்மன்ஸ் இந்த பலவீனங்களை உணர்ந்து உணர்ந்துள்ளார்.

புதன்கிழமையன்று தென்கொரியா குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 -1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட மலேசியா இந்தியாவுடன்  2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. அந்த இரண்டு ஆட்டங்களிலும் மலேசியாவுக்கு அதிகமான பெனால்டி கார்னர்  வாய்ப்புகள்  கிடைத்தன .ஆனால் நமது ஆட்டக்காரர்கள் அதனை கோல் அடிப்பதில் கோட்டை விட்டனர்.

அந்த இரண்டு ஆட்டங்களிலும் மலேசிய குழுவிற்கு ஒன்பது பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. ஆனால் அவற்றில் தலா இரண்டு கோல்களை மட்டுமே   மலேசிய குழுவின் ஆட்டக்காரர்கள் அடிக்க முடிந்தது . எனவே உண்மையில் அந்த இரண்டு ஆட்டங்களிலும் கிடைக்கப்பெற்ற பெனால்டி கார்னர்களை கோலாக்கியிருந்தால் இந்தியா மற்றும் தென் கொரியாவை வீழ்த்தி இருக்கமுடியும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் மலேசியா இப் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு  தகுதி பெற்றிருக்கலாம்.   இந்த நிலைமையில் மலேசியா ஹாக்கி குழுவின் ஆட்டக்காரர்களுக்கு பெனால்டி கானரை  கோல்  அடிப்பதற்கான பயிற்சியை தீவிரப்படுத்த வேண்டும்.

ஏப்ரல் மாதம் மத்தியில்  கோலாலம்பூரில் உலக சீரிஸ் ஹாக்கிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு மலேசியா தகுதி பெற முடியும் .உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களத்தில் இறங்கும் மலேசிய குழுவினர் உலக செரிஸ் போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.

இந்த போட்டியில் மலேசியாவின்  வெற்றிக்கு பெனால்டி கானரை கோல் ஆக்கும் வியூகமும் நிபுணத்துவமும் பெரும் துணையாக இருக்க முடியும்.இதற்கான தீவிர பயிற்சியில்  தேசிய குழுவினர்  இப்போதே ஈடுபட வேண்டியது அவசியமாகும்.ர

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன