முகப்பு > சமூகம் > உலர்ந்த சருமத்திற்கு அற்புத நிவாரணி ‘பயோ ஒயில் ஜெல்’
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலர்ந்த சருமத்திற்கு அற்புத நிவாரணி ‘பயோ ஒயில் ஜெல்’

கோலாலம்பூர், ஏப் 1-

சருமத்தில் ஏற்படும் தழும்புகளைப் போக்குவதில் உலகளவில் பிரசித்தி பெற்றுள்ள பயோ ஒயில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலர்ந்த சருமத்திற்கு ஏற்ற “பயோ ஒயில் டிரை ஸ்கின் ஜெல்” எனும் புதிய பொருளை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

வழக்கமாக சருமத்தில் பூசப்படும் கிரீம்கள் 60 முதல் 80 விழுக்காடு தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதனால், உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் இவற்றைப் பயன்படுத்தும் போது சருமம் விரைவில் வறண்டு போகிறது. எனவே, மிகவும் குறைந்த அளவிலான தண்ணீருடன் எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட இந்த ஜெல்லானது சருமத்தை நீண்ட நேரம் ஈரத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது என்று நுவாந்தா நிறுவனத்தின் வர்த்தகப் ஈரிவு நிர்வாகி லோ ஹூய் வான் தெரிவித்தார்.

இந்தப் பொருளில் ஈரத்தன்மை இழப்பில் இருந்து பாதுகாக்கும் ப்யோ ஒயில் ஸ்கின்கேர் ஒயில், ஷியர் பட்டர் மற்றும் லானொலின் ஆகியவை கலக்கப்பட்டுள்ளன. இவை சருமத்தில் ஓர் அடுக்கை ஏற்படுத்தி ஈரத்தனமை இழப்பைத் தடுக்கிறது என்றார் அவர்.

அதேவேளையில். சரும ஒவ்வாமை பிர்ச்னையை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கும் இது ஓர் அற்புத தீர்வாக அமையும் என்று லோ நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஜெல் சருமத்திற்கு எந்தவொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பது மருத்துவ சோதனை வழி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மேலும், இது சருமத்தில் உள்ள உரோமத் துவாரங்களில் அடைப்புகளை ஏற்படுத்தாது என்பதால் பயனீட்டாளர்கள் எந்தவோர் அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இன்று தொடங்கி நாட்டின் முக்கிய மருந்தகங்கள் மற்றும் பேரங்காடிகளில் விற்பனைக்கு வரும் “பயோ ஒயில் டிரை ஸ்கீன் ஜெல்” மூன்று வகையான அளவுகள் கொண்ட பாக்கெட்டுகளில் காணப்படும்.

50 மி.லிட்டர் (வெ.19.90), 100 மி.லிட்டர் (வெ. 34.95) மற்றும 200 மி.லிட்டர் (வெ.58.25) என்ற அளவு கொண்ட பாக்கெட்டுகளில் இந்த ஜெல் விற்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன