செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > சியரா லியோனில் நிலச்சரிவு:பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம்

சியரா லியோனில் நிலச்சரிவு:பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரிடவுன், ஆக 17-

சியரா லியோனில் பெய்து வந்த பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தலைநகர் பிரிடவுன் வெள்ளத்தில் மூழ்கியது.

அங்குள்ள ரெஜன்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்து விட்டது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள் என்ற பரிதாப நிலை, அங்கு உள்ளது. இன்னும் 600 பேரை காணவில்லை.

இடிபாடுகளுக்கு இடையே அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த நாட்டின் அதிபர் எர்னஸ்ட் பாய் கொரோமா, ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து விட்டது என மிகுந்த வேதனையுடன் கூறினார். உலக நாடுகளின் அவசர உதவியை அவர் கோரி உள்ளார்.

அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் அப்துலாய் பாராய்டாய், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், இடிபாடுகளுக்குள் இன்னும் பலரது உடல்கள் சிக்கியுள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் இப்போது துயரத்தில் உள்ளது என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன