அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > வான் ஹாலின் கருத்தை சாடினார் சோல்ஜ்ஸ்கர் !
விளையாட்டு

வான் ஹாலின் கருத்தை சாடினார் சோல்ஜ்ஸ்கர் !

மென்செஸ்டர், ஏப்.1-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான மென்செஸ்டர் யுனைடெட்டின் ஆட்டத்தரம் குறித்து அதன் முன்னாள் நிர்வாகி லூயி வான் ஹால் தெரிவித்துள்ள கருத்தை நடப்பு நிர்வாகி ஓலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் சாடியுள்ளார். மென்செஸ்டர் யுனைடெட் அணி தாக்குதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சோல்ஜ்ஸ்கர் தெரிவித்தார்.

மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து திடீர் தாக்குதல்களை மேற்கொள்வதாக வான் ஹால் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜோசே மொரின்ஹோ கையாண்ட அதே வியூகத்தை சோல்ஜ்ஸ்கர் பயன்படுத்துவதாக வான் ஹால் தெரிவித்திருந்தார்.

எனினும் வான் ஹாலின் கூற்றில் உண்மையில்லை என சோல்ஜ்ஸ்கர் தெரிவித்தார். சில ஆட்டங்களில் தமது அணி அதிகமான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். பிரான்சின் பி.எஸ்.ஜி அணிக்கு எதிரான ஆட்டத்தைப் பார்த்துவிட்டு வான் ஹால் கருத்து தெரிவித்திருக்கலாம் என சோல்ஜ்ஸ்கர் கூறினார்.ஆனால் அந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு பாணியிலான ஆட்டத்தை முன்னெடுக்க வேண்டியது ஒரு வியூகம் என சோல்ஜ்ஸ்கர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன