அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஆர்டிஎம்மில் இலவச உயர்தர விளையாட்டு அலைவரிசை! – கோபிந்த் சிங் டியோ
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஆர்டிஎம்மில் இலவச உயர்தர விளையாட்டு அலைவரிசை! – கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், ஏப்ரல் 1-

நாட்டின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் உனனத நோக்கத்தில் ஆர்டிஎம்மில் இலவச உயர்தர விளையாட்டு அலைவரிசையை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருவதாக தொடர்பு மற்றும் பல்லூட அமைச்சர், கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

திங்கட்கிழமை, கோலாலம்பூர், அங்காசாபுரியில்-யில் நடைபெற்ற ஆர்டிஎம்மின் 73-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போது GOBIND SINGH இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிய கூடைப்பந்து போட்டி, அனைத்துலக இங்கிலாந்து பூப்பந்துக் கிண்ணம், அனைத்துலகச் சம்மேளன கிண்ணப் பூப்பந்து போட்டி, கோப்பா அமெரிக்கா போன்ற புகழ்ப்பெற்ற விளையாட்டுகளை ஆர்டிஎம் அலைவரிசையில் ஒளிபரப்பும் உரிமங்களை அது பெற்றிருக்கிறது.

தற்போது, ஆர்டிஎம் 2020-இல் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணக் கால்பந்து போட்டியை ஒளிபரப்ப முயற்சித்து வருவதாக கோபிந்த் சிங் டியோ கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன