ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஆடம்பர கடிகாரத்தை கையூட்டாக பெற்றாரா? அமைச்சரின் அரசியல் செயலாளருக்கு தடுப்புக் காவல்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஆடம்பர கடிகாரத்தை கையூட்டாக பெற்றாரா? அமைச்சரின் அரசியல் செயலாளருக்கு தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் ஏப்ரல் 2-

28,000 வெள்ளி மதிப்புள்ள ஆடம்பர கடிகாரத்தை கையூட்டாக பெற்றதாக நம்பப்படும் அமைச்சர் ஒருவரின் அரசியல் செயலாளர் நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

எம். ஏ. சி. சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்காக அந்த அரசியல் செயலாளர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். 47 வயதுடைய அந்த ஆடவரை ஏப்ரல் 5ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் அகமட்ந அஷ்ராப் முகமட் கமால் பிறப்பித்தார்.

மலேசிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் செக்சன் 16 (a) (A) கீழ் அந்த அரசியல் செயலாளர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை மணி ஒன்பது அளவில் அந்த சந்தேகப் பேர்வழி புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

மேம்பாட்டாளர் ஒருவரிடமிருந்து அந்த நபர் 28000 வெள்ளி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை கையூட்டாகப் பெற்றதாகத் தெரிகிறது.

அதோடு அமைச்சிடமிருந்து திட்டங்களை பெறுவதற்கு மேம்பாட்டாளருக்கு அந்த சந்தேகப் பேர்வழி உதவ முன் வந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே தமது அரசியல் செயலாளர் கைது செய்யப்பட்டதை விவசாயம் மற்றும் விவசாய தொழில் சார்ந்த அமைச்சர் டத்தோ சலாஹுடின் அயூப் இதற்கு முன் உறுதிப்படுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன