அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > இயக்குனர் மகேந்திரனின் உடலுக்கு ரஜினிகாந்த் – கமல்ஹாசன் அஞ்சலி
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

இயக்குனர் மகேந்திரனின் உடலுக்கு ரஜினிகாந்த் – கமல்ஹாசன் அஞ்சலி

சென்னை ஏப்ரல் 2-

சிறுநீரக கோளாறு காரணமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் இன்று காலமானார். சம்பவம் அறிந்த திரை உலக பிரபலங்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இயக்குனர் மகேந்திரனின் வீட்டிற்குச் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிகாந்த் மகேந்திரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கட்டித்தழுவி ஆறுதல் வெளிப்படுத்தினார். அதோடு இயக்குனர் மகேந்திரனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டார். அதேபோல் கமல்ஹாசனும் இயக்குனர் மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் மோகன், விஜய் சேதுபதி உட்பட பல பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தை காட்டியவர் இயக்குனர் மகேந்திரன். பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல வெற்றி படங்களை இயக்கினார். இறுதியாக அதர்வா நடித்த பூம்பராங் திரைப்படத்தில் இவர் தோன்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன