பிளாஸ்டிக் பையில் சடலம் இருவர் கைது!

செர்டாங் ஏப்ரல் 3-

பிளாஸ்டிக் பையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக 2 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் இஸ்மாடி புர்ஹான் இதனைத் தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 8 ஆம் தேதி வரை அந்த இரு வங்காளதேசிகளும் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என அவர் கூறினார்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் அந்த ஆடவர் இறந்ததாக நம்பப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பன்டார் கின்ரா ராவுக்கு அருகே இடைநிலைப் பள்ளிக்கு முன்புறம் கருப்பு பிளாஸ்டிக் பையில் போர்வைக்குள் அந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.