அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சிங்கப்பூர் வானொலி அறிவிப்பாளர் ஆனார் விழுதுகள் புகழ் நதியா ஜெயபாலன்!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிங்கப்பூர் வானொலி அறிவிப்பாளர் ஆனார் விழுதுகள் புகழ் நதியா ஜெயபாலன்!

கோலாலம்பூர் மார்ச் 4-

விழுதுகள் நிகழ்ச்சியின் மூலம் மலேசியாவில் பிரபலமானவர் நதியா ஜெயபாலன். விழுதுகள் அறிவிப்பாளர்கள் 3 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பணியாற்றும் வேளையில் அதன் பிறகு அவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறார்கள் என்பது அவரவர் சார்ந்த விசயமாக இருக்கின்றது.

ஆனால் விழுதுகளில் பணியாற்றிய அறிவிப்பாளர்கள் கலைத்துறை மற்றும் ஊடகத் துறையில் தொடர்ந்து தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். குறிப்பாக வினோத்குமார் பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவின் தயாரிப்பாளர் ஆக பணியாற்றும் வேலையில், சுஷ்மிதா நாடறிந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருகிறார்.

அந்த வரிசையில் நதியா ஜெயபாலன் சிங்கப்பூரின் முதன்மை வானொலி நிலையம் ஆன ஒலி 96.8 (கேட்டாலே பரவசம்) அறிவிப்பாளராக இணைந்துள்ளார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து பலர் தங்களின் சமூக தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நவரசம் எனும் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் ரஞ்சினி என்பவரும் அறிவிப்பாளராக இருக்கின்றார்.

ஒலி 96.8 காலை நிகழ்ச்சியை வழக்கம்போலவே ரஃபி தொகுத்து வழங்குகின்றார். அதனைத் தொடர்ந்து நதியா ஜெயபாலன் தமது நிகழ்ச்சியை படைக்க வருகின்றார். சிங்கப்பூரின் முதன்மை வானொலி நிலையமாக உலக ரசிகர்களை கவர்ந்து இழுத்த ஒலியின் அறிவிப்பாளராக நதியா ஜெயபாலன் இணைந்திருப்பது மலேசியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

அநேகன் இணையத்தள பதிவேடும் நதியா ஜெயபாலனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன