ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு!
சமூகம்

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு!

சுங்கைப்பட்டாணி ஏப் 4-

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்கியம் தேர்வு பெற்றார். கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 47 வது ஆண்டு பொதுக்கூட்டம் சுங்கை பட்டாணியில் உள்ள மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கெடா மாநில எழுத்தாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பு தலைவரான பாக்கியம் மீண் டும் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவராக சச்சிதானந்தம், கௌரவ செயலாளராக அ.கலை மலர், துணைச் செயலாளராக அபிராமி பொருளாளராக அம்பிகாபதி ஆகியோர் தேர்வு பெற்றனர். மேலும் செயலவை உறுப்பினர்களாக பெ. நாராயணசாமி, நா. குசலக்குமாரி சுந்தரம்பாள் ,ம.காந்திராஜ், ரெ. வெங்கடசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்வில் மூத்த எழுத்தாளர் செந்துறை கவிஞர் பெ. நாராயணசாமி, எழுத்தாளர் சுந்தரம்பாள் ,கவிஞர் ம. அ.சந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இலக்கிய உரையாற்றிய முரளி அவர்களுக்கும் இந்நிகழ்வுக்கு பொருளுதவி நல்கிய டத்தோ ஓ.ஜி.சண் முகத்திற்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது

One thought on “கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்கியம் தேர்வு!

  1. கெடா மாநில எழுத்தாளர் இயக்கம் பழமையிலிருந்து விடுபட இன்னும் நீண்ட காலமாகுமோ!!!! மாற்றத்தை காண இளைய சமுதாயம் விரும்புகிறது….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன