செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நஜீப் மட்டுமல்ல அனைவரது மீதும் வருமான வரி நடவடிக்கை! – துன் டாக்டர் மகாதீர்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் மட்டுமல்ல அனைவரது மீதும் வருமான வரி நடவடிக்கை! – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் ஏப்ரல் 4-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் . மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி இப்போதைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீதும் வருமான வரித்துறையின் நடவடிக்கை இருக்கும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி வருமான வரி பாக்கி வைத்திருக்கும் இப்போதய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

எனினும் நிச்சயமாக முன்னாள் அமைச்சர்கள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கையின் தீவிரமாக இருக்கும் என்றும் அவர் சொன்னார். அதே வெளியில் நடப்பு அரசாங்கத்தின் அமைச்சர்கள் வருமான வரி பாக்கி வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் மகாதீர் தெளிவுபடுத்தினார்.

2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை 1.5 பில்லியன் வெள்ளி வருமான வரி பாக்கி வைத்திருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிராக எடுக்கப்படும் மேல் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் வினவியபோது டாக்டர் மகாதீர் நாடாளுமன்ற வளாகத்தில் இதனை தெரிவித்தார்.

சவுதி அரேபியா விடமிருந்து நன்கொடை பெற்ற 2.6 பில்லியன் வெள்ளியும் நஜீப்பிற்கு எதிரான வரி வசூலிப்பு நோட்டீஸில் அடங்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன