முகப்பு > உலகம் > டோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு
உலகம்முதன்மைச் செய்திகள்

டோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு

கோலாலம்பூர் ஏப்ரல் 5-

ஆசியாவின் வெற்றிகரமான முன்னணி தொழிலதிபரும் ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் எழுதிய பிளையிங் ஹை என்ற உயரப் பறக்கும் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் தேசிய மொழி பதிப்பு வெளியீடு கண்டது.

கராங்கிராப் புத்தக குழுமம் வெளியிட்டிருக்கும் Terbang Tinggi புத்தகம் புத்ரா உலக வர்த்தக மையத்தில் அனைத்துலக புத்தக விழா 2019 வெளியீடு கண்டது.

மன உறுதி, விடா முயற்சி , நம்பிக்கை,ஆர்வம் ஆகியவற்றுடன் செயல்பட்டதால் குறைந்த விமான கட்டணத்தை கொண்ட விமான நிறுவனத்தை உருவாக்கும் டான்ஸ்ரீ டோனி பெர்ணான்டஸின் லட்சியக் கனவு நிறைவேறியது.
அவரது கடுமையான உழைப்பு இவ்வட்டாரத்தில் விமான பயணத்தை அனைத்து மக்களுக்கும் எளிமையாக்கியதோடு ஏர் ஆசியாவை பல கோடி வெள்ளி நிறுவனமாகவும் மாற்றியது.

அவரது கடுமையான உழைப்பு இவ்வட்டாரத்தில் விமான பயணத்தை அனைத்து மக்களுக்கும் எளிமையாக்கியதோடு ஏர் ஆசியாவை பல கோடி வெள்ளி நிறுவனமாகவும் மாற்றியது.

நீங்கள் கனவு காண்பதற்கு தயாரானால் அதனை நனவாக்க முடியும். என்னைப்போல் ஆர்வத்தை கொண்டிருப்பவர்கள் அதனை லட்சியமாக வெற்றி பெறுவதற்கு அனைத்து மலேசியர்களுக்கு ம் இந்த புத்தகம் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் Terbang Tinggi புத்தகம் 35 வெள்ளிக்கு விற்கப்படும். இந்த நிகழ்வில் கராங்கிராப் குழும நிர்வாக இயக்குனர் டத்தோ ஹிசாமுடின் யாக்கோப் அவர்களும் கலந்து கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள முன்னணி புத்தகக் கடைகளிலும் இப்புத்தகம் கிடைக்கும்.

ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழா ஒரு நிறைவுக்கு வரும். இந்த புத்தக விழாவில் தெர்பாங் திங்கி புத்தகம் வாங்குவோருக்கு 500 Air Asia big point மற்றும் ஏர் ஆசியா கிரடிட் கார்டு மூலம் புத்தகம் வாங்குவோருக்கு மேலும் 500 big point பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

One thought on “டோனி பெர்னான்டஸ் எழுதிய ஹை பிளாயிங் புத்தகம் தேசிய மொழியில் வெளியீடு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன