அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தலைவர் 167 : போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் போட்டோக்கள் லீக்: படக்குழு அதிர்ச்சி
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தலைவர் 167 : போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் போட்டோக்கள் லீக்: படக்குழு அதிர்ச்சி

சென்னை:

ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினியின் போலீஸ் கெட்டப் புகைப்படங்கள் கசிந்துவிட்டது. பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கான போட்டோஷூட் நேற்று சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது. ரஜினி போலீஸ் கெட்டப்பில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் கசிந்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார். புகைப்படங்கள் கசிந்ததை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த புகைப்படங்களை தயவு செய்து யாரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என்று ரஜினி ரசிகர்களும், பி.ஆர்.ஓ.வும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவர்கள் கோரிக்கை விடுப்பதற்கு முன்பே அந்த புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டுவிட்டன. போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே கசிகிறது என்றால் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்குமோ என்று ரஜினி ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். முருகதாஸ் சார் சூதானமாக இருங்க என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புகைப்படங்களை கசியவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். படத்தின் பூஜை வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன