அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானார்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானார்

நாமக்கல், ஏப்.6- 

நாமக்கலைச் சேர்ந்த தமிழறிஞர் மற்றும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனருமான சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானார்.

சிலம்பொலி செல்லப்பன் 1929ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். இவர் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். தமிழ் எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் ஆவார். உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குனர், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர்.

தமிழுக்கு பல்வேறு வகையில் பெரும் தொண்டு ஆற்றியுள்ளார். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றுள்ளார். இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சி துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இந்நிலையில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நல குறைவினால் இன்று காலமானார். இவர் தமிழகத்தின் 3 முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன