முகப்பு > அரசியல் > ஹராப்பானின் பொய் மூட்டைகளை ம.இ.கா.வினர் அவிழ்க்க வேண்டும்!  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஹராப்பானின் பொய் மூட்டைகளை ம.இ.கா.வினர் அவிழ்க்க வேண்டும்!  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஜொகூர் பாரு, ஏப்ரல், 8-

ம இ கா தப்பும் தவறுமாக விசமத் தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் ஹராப்பான் கூட்டணியினருக்கு எதிரான பிரச்சாரப் பேருக்கு ம இ கா வின் எல்லா மட்டங்களிலுமுள்ள தலைவர்கள் தயாராக வேண்டுமென்று  மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

ஜொகூர் மாநில மஇகா வின் ஏற்பாட்டில் சட்ட மன்ற உறுப்பினரும் மாநில மஇகா தலைவருமான  வித்தியானந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற  மாபெரும் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து பேசும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

ம இ காவுக்கு என்று அல்லது கட்சி நடவடிக்கைகளுக்கென்றோ கடந்த காலங்களில் அரசாங்கம் எந்த நிதியையும் வழங்கியது கிடையாது; சில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்திருக்கிறது,குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் ஆலயங்கள்,கல்லூரிகள் ,சமூகநல மேம்பாட்டுத் திட்டங்களுக்கென்றளவில் நிதி ஒதுக்கீடு நடந்திருக்கலாமேயொழிய கட்சிக்கென்றளவில் எந்த நிதியும் பெற்றது கிடையாது.

ஆனால், ஹராப்பானிலுள்ள சில இந்தியத் தலைவர்கள் அரசாங்கம் ம இ காவுக்குக் கொட்டிக்கொடுத்ததாகவும் மஇகா அந்த பணத்தையெல்லாம் ஏப்பம் விட்டு விட்டதாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அவர்களின் இந்த பொய்ப் பிரச்சாரத்தை சிலர் நம்பவும் செய்தனர் அதன் விளைவாகத்தான் ம இ கா வேட்பாளர்கள் பலர் தேர்தலில் தோற்கவும் நேர்ந்தது.

எனவே இனியும் அவர்களின் இந்த பொய்ப் பிரச்சாரத்தை நாம் அனுமதிக்கொண்டிருக்க முடியாது; இனி அவர்களுக்கு எதிராக மஇகாவின் எல்லா மட்டங்களிலுமுள்ள தலைவர்களும் எதிர்வினையாற்ற வேண்டும். வலிமையான பிரச்சாரப் போரை நடத்தவேண்டுமென்று மேலவைத் தலைவரு மான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

இன்று பாஸ் கட்சியுடன் நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவைக்கண்டு ஹராப்பான் கூட்டணியினர்  லறுகின்றனர், இந்து மதத்திற்கும் இன்னப்பிற மதங்களுக்கும் பாஸ் எதரியென்று ஜசெகவினர் தப்பும் தவறுமான கருத்தைப்  பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த கட்சியினர்தான் பல தேர்தல்களில் அரசியல் ஆதாயத்திற்காக பாஸுடன் கூட்டணி வைத்துச் செயல்பட்டு வந்துள்ளனர், ஆனால் ம இ கா இன்று; பாஸுடன் வைத்துள்ள கூட்டணிக்கு சமூகம் சார்ந்த அக்கறைத்தான் முக்கிய காரணமாகும்.

குறிப்பாக இந்துமதத்திற்கு பாஸ் எதிரானது என்ற பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை!கிளந்தான், திரங்காணு, கெடா போன்ற மாநிலங்களிலெல்லாம் பாஸ் ஆட்சி் நடத்தியிருக்கிறது, இந்த காலக்கட்டங்களில் எப்போதாவது எங்காவது ஆலயங்கள் உடைக்கப்பட்டதாக ஏதும் தகவலுண்டா? எனவே, பாஸ் இஸ்லாமியக் கட்சியென்றாலும் பிற மதங்களையும் மதிக்கிற கட்சியென் பதை இந்திய சமூகம் உணரவேண்டிய நேரம் வந்து விட்டது.

அதே வேளைஅக்கட்சியுடனான சந்திப்பானது; ஆதரவை ,ஏன்இந்து மதத்திற்கான ஒரு பாதுக்காப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது ? என்று வினவிய டான்ஸ்ரீ, தொடர்ந்து இன்று பாஸை மதவாதமென்கிற இன்றைய பிரதமர் துன் மகாதீர் அதனுடைய ஆதரவை ஏன் அண்மையில் நடைபெற்றுமுடிந்த செமினி இடைத்தேர்தலில் கேட்டார்? எனவே மதவாதத்தையும் இனவாதத்தையும் இன்று முன்னெடுப்பது ஹராப்பான் கூட்டடணி யிலுள்ள கட்சிகள்தான் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறுதியிட்டுக் குற்றஞ்சாட்டினார்.

2000 க்கும் மேற்பட்ட ம இ கா வினர் கலந்து கொண்ட இவ்விருந்து நிகழ்ச்சிக்கு கூலாய் தொகுதி ம இ கா தலைவரும் மாநிலத் துணைத்தலைவருமான சுப்பையா தலையேற்றார், மேலும் மாநில அம்னோத்தலைவரும் மாநில மசீச துணைத்தலைவரும், ம இ காவின் பல மட்டங்களிலுள்ள தலைவர் களும் பங்கேற்றனர், இந்நிகழ்ச்சியில் ஐந்து கட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்த 50 ஆயிரத்தை ம இ கா தலைமையகம் வழங்குமென்று தேசியத் தலைவர் அறிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன