புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > அவன் போகவும் மாட்டான்! சாகவும் மாட்டான்! தலயின் மரண மாஸ் டிரைலர்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அவன் போகவும் மாட்டான்! சாகவும் மாட்டான்! தலயின் மரண மாஸ் டிரைலர்!

அஜித்குமார் 2 ஆண்டுகாலமாக நடித்த விவேகம் திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியீடு காண்கின்றது. அதனை முன்னிட்டு, நேற்று மலேசிய நேரப்படி பின்னிரவு 2.30க்கு இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

வெளியிட்ட சில நிமிடங்களில் லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த டிரைலரை பார்த்துள்ளார்கள். இந்நிலையில் மரண மாஸ் டிரைலர் என பல பிரபலங்கள் தங்களின் சமூக தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  அந்த டிரைலரின் தொடக்கத்தில் நீ யாருடா என ஒரு குரல் ஒலிக்கின்றது. அதற்கு தல அஜித், நான் யாருங்குரத நான் எப்போவுமே முடிவு பண்றது இல்லை!. அவங்களுக்கு நான் நண்பனா? இல்லை எதிரியானு என் எதிர்ல நிக்கறவங்கதான் முடிவு பண்ணுவாங்க! என கூறுகிறார்.

அதன் பிறகு இராணுவ வீரர்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிரடியான சண்டை காட்சிகள் இடம்பெறுகின்றன. அதன் பிறகு ‘ நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் காப்பாத்திக்கிறது இல்லை. நம்மலே எப்பவும் காப்பாத்தறது என்ன தெரியுமா. என அஜித் கேட்கிறார். நமக்குள்ள இருக்குற பிரட்ண்ஷிப் என ஒரு நண்பர் கூறுகிறார். எனக்கு என்ன சொல்றதுனே தெரியலே சார் என கருணா கூறும் போது, ஒரு டீ சொல்லுங்க என அஜித் கூறுகிறார்.

பின்னர் கஜோல் அகர்வாலுடனான காதல் காட்சிகள் இடம்பெறுகின்றது. அதில் உங்கூட இருக்குறது சந்தோஷங்கறத விட நீதான் என் சந்தோஷமாவே இருக்க! என்ற வசனங்களில் இயக்குநரும் வசனத்திற்கு சொந்தக்காரருமான சிவா தனித்து நிற்கிறார்.

அதோடு டிரைலரின் இறுதியில் வில்லன், போராடாம அவன் போகவும் மாட்டான்! சாகவும் மாட்டான் பினிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வரான்! இந்த வசனம் அஜித் ரசிகர்களுக்கான கொண்டாட்டத்தின் தொடக்கமாக அமைகின்றது. மொத்தத்தில் காதல், ஆக்ஷன் என அனைத்திலும் உலக தரத்திற்கான முன்னோட்டமாக விவேகம் டிலைலர் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன