அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜோகூர் மந்திரிபுசார் ஒஸ்மான் சபியான் பதவி விலகினார்!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஜோகூர் மந்திரிபுசார் ஒஸ்மான் சபியான் பதவி விலகினார்!

கோலாலம்பூர் ஏப்ரல் 9-

ஜோகூர் மந்திரி புசார் ஒஸ்மான் சபியான் பதவி விலகினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதனை அறிவித்தார். கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஒஸ்மான் சபியான் பதவி விலகல் கடிதத்தை தம்மிடம் சமர்ப்பித்ததாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

நேற்று புத்ராஜெயாவில் தம்மை சந்தித்த போது ஒஸ்மான் இரண்டு கடிதங்களை வழங்கியதாக அவர் சொன்னார். அவற்றில் ஒன்று தமக்கும் மற்றொன்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தானுக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இப்போதைக்கு ஜொகூரில் மந்திரி புசார் இல்லை. ஜோகூரில் அடுத்த மந்திரிபுசாராக யார் நியமிக்கப்படுவார் என வினவப்பட்டபோது நம்பிக்கை கூட்டணியில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் மந்திரி புசார் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என டாக்டர் மகாதீர் மறுமொழி தெரிவித்தார்.

ஒஸ்மான் சபியான் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை பிரதமர் வெளியிடவில்லை. எனினும் அவரது பதவி விலகலை தாம் ஏற்றுக் கொண்டதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

ஒஸ்மான் சபியானுக்கு பதில் மந்திரி புசார் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்காக தமது கட்சி சிலரது பெயரை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இப்போதைக்கு ஜொகூர் மாநிலத்தில் மந்திரி புசார் பதவியில் எவருமில்லை என்பதால் இடைக்காலமாக ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன