அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 17 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச உணவு – மருத்துவ பரிவு அட்டை விநியோகம்!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

17 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச உணவு – மருத்துவ பரிவு அட்டை விநியோகம்!

ஈப்போ ஏப் 10-

வசதி குறைந்த நிலையில் உள்ளவர்களுக்கு மாதாந்திர உணவு மற்றும் இலவச மருத்து பரிவு அட்டையை பேரா அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக வெளியீடு செய்தது. இதனை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் இன்று வெளியிட்டார் .

இந்த திட்டத்தில் 17 ஆயிரம் பேர் பயன் அடைவர் தேவைகள் ஏற்பட்டால் அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார். இலவச உணவு அட்டையை பெற்றவர்கள் மாதம் 80 வெள்ளிக்கான உணவு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் அதில் பிள்ளைகளின படிப்புகளுக்கு தேவைப்படும் உபகரணங்களையும் வாங்கிக கொள்ளலாம்.

இலவச மருத்துவ அட்டையைப் பெற்றவர்கள் 300 வெள்ளிக்குள் மருத்துவ செலவுகளை செய்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு வெ.22 மில்லின் நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளதாக மாநில அரசாங்க செயலகத்தில் உள்ள பங்குவேட் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையில் குறிப்பிட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம் எனும் கோட்பாட்டுடன் செயல்படும் மாநில அரசாங்கத்தின் கட்டப்பாட்டை இது காட்டுவதாக அவர் தெரிவித்தார். இந்த அட்டையை வைத்திருப்போர், மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 169 கடைகளிலும் அதோடு, நிர்ணயக்கப்பட்ட 400 கிளினிக்குகளில் சுகாதார பரிசோதனையை பெற முடியும்.

மாநில அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து இத்திட்டத்தின் கீழ் உதவித் தேவைப்படும் மேலும் அதிகமான மக்களுக்கு உதவும் கட்டப்பாட்டை மாநில அரசாங்கம் கொண்டுள்ளதாகவும் சொன்னார். மாநிலத்திலுள்ள மிகவும் வறுமையிலுள்ள மக்களை வறுமை கோட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன