அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > குடிநீர் கட்டணத்தை உயர்த்த ஆறு மாநிலங்கள் இணக்கம்! -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அரசியல்முதன்மைச் செய்திகள்

குடிநீர் கட்டணத்தை உயர்த்த ஆறு மாநிலங்கள் இணக்கம்! -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், ஏப். 11-

குடிநீர் விநியோக சேவை தொழிற்துறையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஏற்ப ஆறு மாநிலங்கள் குடிநீர் கட்டணத்தை உயர்த்த இணக்கம் தெரிவித்திருப்பதாக குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் மற்றும் தேசிய குடிநீர் சேவை ஆணையம் (ஸ்பென்) ஆகியவற்றுடனான பேச்சுவார்த்தை வழி இந்த உடன்பாடு காணப்பட்டதாக மக்களவையில்  அமைச்சர்குறிப்பிட்டார். அவை எந்தெந்த மாநிலம் என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை.

எனினும் , பேச்சு வார்த்தை தொடர்வதாகவும் மேலும்  இரு மாநிலங்கள் குடிநீர் கட்டணத்தை உயர்த்த சம்மதம் தெரிவிக்கும் என்றும் கினபாத்தாங்கான் தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர்  குறிப்பிட்டார்.

 குடிநீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான காரணம் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கான சில்லறை விலை போன்றவை குறித்து புங் மொக்தார் வினவினார். சில்லறை விலை குறித்து விவரித்த அமைச்சர் சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் நடவடிக்கை ஆற்றல் உட்பட இதர விவகாரங்களைப் பொருத்து அது மாறுபட்டிருக்கும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன