அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > மலேசியா: சட்டவிரோதமாக பணியாற்றிய 44 வெளிநாட்டினர் கைது!
குற்றவியல்

மலேசியா: சட்டவிரோதமாக பணியாற்றிய 44 வெளிநாட்டினர் கைது!

கோலாலம்பூர், ஏப்ரல் 11-

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள முகிம் பட்டு(Mukim Batu) பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 44 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு சட்டவிரோதமாக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கோலாலம்பூர் குடிவரவுத்துறை இயக்குனர் ஹமிதி ஏடம், “இவ்விவகாரத்தில் வேலை வழங்கிய நிறுவனத்தின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக்கொண்ட உள்ளூர் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேடுதல் வேட்டையில் 38 அதிகாரிகள் ஈடுபட்டனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சோதனை சில தினங்களுக்கு முன் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்றுள்ளது. “ 79 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 34 பேரிடம் மட்டுமே முறையான ஆவணங்கள் இருந்தன. பயணம் மற்றும் பணி ஆவணங்களை சமர்பிக்காத வெளிநட்டினர் இதில் கைது செய்யப்பட்டனர்,” என ஹமிதி ஏடம் தெரிவித்திருக்கிறார்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் இந்தோனேசியா, வங்கதேசம், மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கண்டறியும் நடவடிக்கையை சமீப ஆண்டுகளாக மலேசிய குடிவரவுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன