அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஏழைகளின் சமூகநல உதவி நிறுத்தம் ஏன்? முகமட் ஹாசான் கேள்வி
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஏழைகளின் சமூகநல உதவி நிறுத்தம் ஏன்? முகமட் ஹாசான் கேள்வி

ரந்தாவ், ஏப்ரல் 11-

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பரப்புரை கட்சிகளுக்கிடையே சூடு பிடித்துள்ளது. முன்னாள் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ முகமது ஹாசான் இந்தத் தொகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் அவருக்குத் தெரியும். அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதில் முன்னணியில் இருக்கிறார். மக்களுடன் சகஜமாகப் பழகும் அவரது பாணி வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அவர் செல்லுமிடமெல்லாம் வயது முதிர்ந்தவர்கள் தங்களது சமூகநல உதவிப் பணம் கிடைக்கவில்லையெனப் புகார் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக டத்தோஶ்ரீ முகமது ஹாசான் பரப்புரையின் போது பேசிய அவர், இந்த அரசாங்கம் எல்லோரையும் ஒரே மாதிரியாக்ப பார்க்க வேண்டும்.

வயது முதிர்ந்தவர்களின் உதவித் தொகையை ஏன் நிறுத்த வேண்டும். ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமின்றி மாநிலம் முழுதும் ஏழைக்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தில் பணம் இல்லையெனப் பொய் சொல்லக் கூடாது. தேசிய முன்னணி அரசாங்கம் வங்கியில் ரொக்கமாக 7 கோடி 64 இலட்சம் ரிங்கிட் இருப்பு வைத்து விட்டு வந்தது. பக்காத்தான் ஹாரப்பன் தலைவர்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை. அதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன