அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசியாவின் ஒரு பகுதி ஜோகூர்! –  டாக்டர் மகாதீர்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மலேசியாவின் ஒரு பகுதி ஜோகூர்! –  டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் ஏப்ரல் 11-

மலேசியாவின் ஒரு பகுதியாக ஜொகூர் இருப்பதால் அதன் நிர்வாகத்தின் உள்விவகாரங்களில் தாம் தலையிடுவதாக விவகாரம் எழவில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

ஜோகூர் நிர்வாகத்தின் உள்விவகாரத்தில் தாம் தலையிடுவதாக தமக்கு எதிராக குற்றச்சாட்டு எழவில்லை என அவர் கூறினார். இந்நாட்டின் ஒரு பகுதியாக ஜொகூர் இருப்பதாக நான் நம்புகிறேன் என்றும் அவர் சொன்னார்.

ஜோகூர் ஒரு தனி நாடாக இருந்திருந்தால் அதன் உள் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற நிலையில் நான் இருந்திருப்பேன் என டாக்டர் மகாதீர் கூறினர்.

ஜோகூர் தனி நாடாக இருந்திருந்தால் அந்நாட்டின் உள் விவகாரத்தில் தாம் தலையிட வேண்டியிருக்காது என செர்டாங் விவசாய கண்காட்சி மையத்தில் மலேசிய வாகன கண்காட்சியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் மகாதீர் இத்தகவலை வெளியிட்டார்.

ஜோகூர் மாநில உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் கூறியிருந்தது குறித்து கருத்துரைத்தபோது டாக்டர் மகாதீர் இதனைத்
தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன