அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > உச்சம் தொட்ட ஆளப்போறான் தமிழன்! மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

உச்சம் தொட்ட ஆளப்போறான் தமிழன்! மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்

சென்னை ஏப்ரல் 12-

அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையை கடந்துள்ளது.

இதனை தளபதி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள். சமூகத் தளங்களில் இந்தப் பாடலை பதிவேற்றம் செய்து தமிழனின் புகழை உலகம் போற்ற செய்த இயக்குனர் அட்லி யையும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

விஜய் வரலாற்றில் மிகச்சிறந்த பாடலை தந்த இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இற்கு வாழ்த்துச் சொல்லும் பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் காணமுடிகின்றது. ஏ ஆர் ரஹ்மானும் இந்தப் பாடல் நூறு மில்லியனை கடந்ததை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கின்றார்.

அன்பை கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம் மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம். என்று தமிழின் புகழ் கூறும் இப்பாடல் வரிகளை எழுதிய கவிஞர் விவேக்கிற்கு அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன