முகப்பு > உலகம் > இரண்டாம் நிலை வெற்றியாளர் பட்டத்தை வென்று மலேசியர்களுக்கு பெருமை சேர்த்தார் யாஸ்மின் சரவணன்
உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

இரண்டாம் நிலை வெற்றியாளர் பட்டத்தை வென்று மலேசியர்களுக்கு பெருமை சேர்த்தார் யாஸ்மின் சரவணன்

சிங்கப்பூர் ஏப்ரல் 12-

மலேசியாவின் மனித கால்குலேட்டர் என அழைக்கப்படும் யாஸ்வின் சரவணன் (வயது 15) ஆசிய திறமையாளர்கள் போட்டியில் இரண்டாம் நிலை பட்டத்தை வென்று மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

ஆசியாவிலும் திறமையானவர்கள் உண்டு என்ற தலைப்புடன் மூன்றாவது ஆண்டாக Asia’s Got Talent எனும் போட்டி நடந்தது. இப் போட்டியின் இறுதிச் சுற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.

போட்டியில் தைவானைச் சேர்ந்த மேஜிசியன் சியான் முதல் பரிசை வென்றார். அவருக்கு ஒரு லட்சம் வெள்ளி அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. (4 லட்சத்து 12 ஆயிரம் மலேசியர் ரிங்கிட்). போட்டியின் மூன்றாவது பரிசை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.

24 பேர் கலந்துகொண்ட இறுதிப்போட்டியில் துன் உசேன் ஓன் இடைநிலை பள்ளியைச் சேர்ந்த யஸ்மின் சரவணன் இரண்டாம் நிலை வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மலேசியர்களை மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியாவின் மனித கால்குலேட்டர் என அழைக்கப்படும் யாஸ்வி0ன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கணிதம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். இந்த ஆசிய திறமையாளர்கள் போட்டியில் அவர் கலந்து கொண்ட பிறகு ஒட்டுமொத்த மலேசியர்களின் பார்வையும் அவர் மீது திரும்பியது.

வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மலேசியர்கள் அனைவரும் அவருக்கு வாக்களித்தனர். நிலையில் இரண்டாம் நிலை வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்று ஆசிய அளவில் மலேசியாவிற்கு மிகப்பெரிய புகழை தேடித் தந்திருக்கிறார் யாஸ்வின் சரவணன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன