அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் – புவான்ஸ்ரீ விவியன் மீது ஆட்கடத்தல் உட்பட மூன்று குற்றச்சாட்டுக்கள்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் – புவான்ஸ்ரீ விவியன் மீது ஆட்கடத்தல் உட்பட மூன்று குற்றச்சாட்டுக்கள்!

கிள்ளான் ஏப்ரல் 12-

தங்களது வீட்டு உதவியாளர்களில் மூவரை கட்டாயமாக வேலை வாங்கியது மற்றும் ஆள் கடத்தியது உட்பட டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி புவான்ஸ்ரீ விவியன் கீதிஸ்வரன் மீது கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.

மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வாணிக தொழிலியல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மற்றும் புவான் ஸ்ரீ விவியன் ஆகியோருக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஷியனாயாத்தி முன்னிலையில் குற்றஞ் சாட்டப்பட்டனர்.

இவ்விருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். கே.கீதிஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரான கென்னத் ஈஸ்வரனும் விவியுனும் 25, 29 மற்றும் 41 வயதுடைய இந்தோனேசியாவின் மூன்று பெண்களை ஆள் கடத்தியதாக கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கிடையே காஜாங், கண்டிரி ஹைட்ஸ் ,ஜாலான் சிந்தா ஆலமிலுள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் குடியேற்ற சட்டத்தின் ஆள் கடத்தலுக்கு எதிரான மற்றும் ஆள் கடத்தலுக்கு எதிரான 12ஆவது விதியின் கீழ் கென்னத் ஈஸ்வரன் மற்றும் விவியன் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

அவ்விருவருக்கும் 50,000 வெள்ளி ஜாமீன் அனுமதிக்கப்பட்டது. அதோடு அவர்களது கடப்பிதழ்களையும் ஒப்படைக்கும்படி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் டி.பி.பி பத்னின் யூசோப் குற்றச்சாட்டை கொண்டு வந்தார். ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி சார்பில் வழக்கறிஞர்கள் சசி தேவன் , டத்தோ சி விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன