அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பெட்ரோனாஸ் எண்ணெய் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு இருவர் காயம்
குற்றவியல்

பெட்ரோனாஸ் எண்ணெய் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு இருவர் காயம்

ஜோகூர்பாரு. ஏப்ரல் 12-

பெங்கெராங் ரெப்பிட் பெட்ரோனாஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

இன்று விடியற்காலை மணி 1.25 அளவில் பெரிய அளவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அந்த நிறுவனத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு இடங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த இரு தொழிலாளர்கள் வெளி நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். காயமடைந்த இரு தொழிலாளர்கள் பெங்கிரான் ரெப்பிட் மருத்துவ அவசர மையத்தில் சிகிச்சை பெற்றனர்.

5 தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 30 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கோத்தா திங்கி போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் அஸ்மோ பாஜா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன