நீதானே நீதானே இசை புயலின் மெர்சல் பாட்டு!

தளபதி விஜய் நடிக்கும் 61ஆவது திரைப்படம் மெர்சல். இந்தத் திரைப்படத்தை தேனான்டாள் பிக்சஸ் தமது 100ஆவது படமாக தயாரித்து வருகின்றது. தெறி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி, தளபதியுடன் கைகோர்த்துள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசை புயல், ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதால், எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, இத்திரைப்படத்திலிருந்து ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை வெளியீடு செய்தார்கள்.

https://www.youtube.com/watch?v=PdnWjE8YP8k

இதனை மலேசிய விஜய் ரசிகர்களும் தாறுமாறாகக் கொண்டாடினார்கள். இந்நிலையில் இன்று இரவு 8.30க்கு மெர்சலில் நீதானே நீதானே என்ற பாடல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலை முன்னணி பாடகி ஸ்ரெயா கோஷல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்….

என் மாலை வானம் மட்டம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ

இந்தப் பாடல் தற்போது டுவிட்டர் மற்றும் முகநூலில் வைரலாகப் பரவி வருகின்றது. https://www.saavn.com/p/album/tamil/Neethanae-From-Mersal-2017/67RGBMYN9GQ_